அன்புடைமை
தமிழ்நாடு 6 ஆம் வகுப்பு பழைய சமச்சீர் தமிழ் புத்தகம் - இ யல் 1 திருக்குறள் அன்புடைமை பகுதியில் இடம்பெற்ற வினாக்களின் தொகுப்பு. பின்புறம் உள்ள பயிற்சி வினாக்களும் சேர்க்கப்பட்டுள்ளது. 6th old samacheer tamil book lesson 1 book back questions also included. இங்கு பாடல் மற்றும் அதன் பொருள் புத்தக வடிவிலேயே கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் சந்தேகம் எழும்போது மேற்பார்வையிட வசதியாக இருக்கும் என்று. அன்புடைமை 1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். 2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. 4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. 5. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. 6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. 7. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். 8. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. 9. புறத்துறுப்பு எல்லாம் எவன்ச...