தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயங்கள்
தமிழக பறவைகள் சரணாலயம்
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:
தமிழ்நாட்டில் இதுவரை அங்கீகாரம் பெற்ற 18 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
நீர்நிலைகளில் வாழும் பறவைகளைப் பாதுகாக்கவும், பறவைகள் அதிகம் வந்து தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து அவற்றைப் பாதுகாத்தும் வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட காலங்களில் இப்பகுதிகளுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து இங்கு தங்கி செல்கின்றன. இவைகள் மீண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் முடிவில் தங்கள் இருப்பிடத்திற்க்கு திரும்புகின்றன.
தமிழ்நாட்டில் இருக்கும் பறவைகள் சரணாலயங்கள் , அவற்றின் இருப்பிடம், பரப்பளவு, அமைப்பு பற்றி விரிவாக இங்கு பார்ப்போம்.
தமிழக அரசு இதுவரை அறிவித்துள்ள பறவைகள் சரணாலயங்கள்: மொத்தம் 18.
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள்
வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்) 1977
பழவேற்காடு ஏரி (திருவள்ளூர் மாவட்டம்)1980
கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)1989
கஞ்சிரங்குளம் (இராமநாதபுரம் மாவட்டம்)1989
சித்திரங்குடி (இராமநாதபுரம் மாவட்டம்)1989
கூந்தன்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)1994
வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)1997
வேடந்தாங்கல் -காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் 1998
மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்) 1998
உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)1998
வடுவூர் (தஞ்சாவூர் மாவட்டம்)1999
கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)2000
தீர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் (இராமநாதபுரம் மாவட்டம்)2010
சக்கரக்கோட்டை தொட்டி பறவைகள் சரணாலயம் (இராமநாதபுரம் மாவட்டம்)2012
ஒசுடு ஏரி பறவைகள்( சரணாலயம்விழுப்புரம் மாவட்டம்)2015
கழுவேலி ஈரமண் நிலம் (விழுப்புரம் மாவட்டம்)2021
நஞ்சராயன் ஏரி(திருப்பூர் மாவட்டம்)2022
தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் (ஈரோடு மாவட்டம்)2023
1. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் :
-அமைந்துள்ள இடம் :
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள வேட்டங்குடி பட்டி மற்றும் பெரிய கொல்லுக்குடி பட்டி கிராமங்களை உள்ளடக்கியது.
-மொத்த பரப்பளவு:
38.4 ஹெக்டேர்
-அரசு அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1977-ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-இயற்கை அமைப்பு முறை:
கருவேல மரங்களால் சூழ்ந்த வனப்பகுதி பறவைகள் தங்கிச் செல்ல ஒரு நல்ல இயற்கையான புகலிடமாக உள்ளது.
-வருகை தரும் பறவையினங்கள்:
மீன் கொத்திகள்,பாம்புத் தாரா,இரவு நாரை,கரண்டி வாயன்கள்,கதிர்க் குருவிகள், சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கொண்டைக் குருவிகள், நத்தை குத்தி நாரை.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களாகும்.
2.பழவேற்காடு ஏரி (திருவள்ளூர் மாவட்டம்)1980
-அமைந்துள்ள இடம் :
சென்னையிலிருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு- ஆந்திரக் கடற்கரையை சேர்ந்த பகுதியாக அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
153 சதுர கி.மீ தமிழ்நாட்டைச் சார்ந்தது.
-அரசு அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1980-ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-இயற்கை அமைப்பு முறை:
நான்கு பக்கங்களிலும் கரைகளை கொண்டிருக்கும் இந்த அமைப்பு சிறிய அளவிலான முகப்பினைக் கொண்டு வங்காள விரிகுடாவுடன் இணைந்துள்ளது.இதன் மூலம் இங்கு நன்னீரும், கடல் நீரும் கலந்து காணப்படும் சூழ்நிலையை கொண்டுள்ளது.
-வருகை தரும் பறவையினங்கள்:
பூநாரைகள், உள்ளான்கள்,பட்டைத் தலை வாத்துக்கள், பவளக்காலிகள், நெட்டைக் காலிகள், பலவித வாத்துகள், கொக்குகள், கரண்டிவாயான்கள், மீன்கொத்திகள், பருந்துகள்,நாரைகள், கொக்குகள் ஆகியவை காணப்படுகின்றன
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களாகும்.
இதர தகவல்கள் :
இந்த சரணாலயம் இந்தியாவின் 2-வது மிகப் பெரிய உவர்நீர்க்குள அமைப்பு ஆகும். இது ஆண்டிற்கு 850-2050 மி.மீ மழைப்பொழிவினையும், 14 டிகிரி – 33 டிகிரி வரை வெப்பநிலையை கொண்ட காலநிலையை பெற்றுள்ளது.
3. கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)1989
-அமைந்துள்ள இடம் :
இச்சரணாலயம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தம் தாலுகாவில் உள்ளது.
-மொத்த பரப்பளவு:
61.21 ஹெக்டேர்
-அரசு அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1989
-இயற்கை அமைப்பு முறை:
சென்னையிலிருந்து சுமார் 86 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
-வருகை தரும் பறவையினங்கள்:
வாத்துகள், ஊசிவால் வாத்துகள், தட்டைவாயன், முக்குளிப்பான், புள்ளிமூக்கு வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, சின்னக் கொக்கு, தேன் சிட்டு, ஆந்தைகள், மீன்கொத்திகள் ஆகியவை காணப்படுகின்றன.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களாகும்.
4. கஞ்சிரங்குளம் (இராமநாதபுரம் மாவட்டம்)1989
-அமைந்துள்ள இடம் :
இச்சரணாலயம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள கஞ்சிரன்குளம் என்னும் ஊரில் உள்ளது.
-மொத்த பரப்பளவு:
66.66 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1989
-இயற்கை அமைப்பு முறை:
முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
-வருகை தரும் பறவையினங்கள்:
மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் , சின்னக் கொக்கு, பெரிய கொக்கு ஆகியவை முக்கியமானவையாகும்.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களாகும்.
5. சித்திரங்குடி (இராமநாதபுரம் மாவட்டம்)1989
-அமைந்துள்ள இடம் :
இச்சரணாலயம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளது.
-மொத்த பரப்பளவு:
48 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1989
-இயற்கை அமைப்பு முறை:
இவ்விடம் இராமநாதபுரத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
-வருகை தரும் பறவையினங்கள்:
இங்கு கூழைக்கடா,குருட்டுக் கொக்கு, சின்னக் கொக்கு, பெரிய கொக்கு, நத்தை குத்தி நாரை ஆகியவை காணப்படுகின்றன.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களாகும்.
6. கூந்தன்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)1994
-அமைந்துள்ள இடம் :
இச்சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
129.33 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1994
-இயற்கை அமைப்பு முறை:
இது கூந்தன்குளம், காடன்குளம் என இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பரப்பில் பரந்து அமைந்துள்ளது.
-வருகை தரும் பறவையினங்கள்:
இங்கு பூநாரைகள், தட்டை வாயன்,கரண்டி வாயன், செண்டு வாத்து, மஞ்சள் மூக்கு வாத்து,பட்டைத் தலை வாத்து, செங்கால் நாரை, முக்குளிப்பான், ஆகியவை காணப்படுகின்றன.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களாகும்.
7. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)1997
-அமைந்துள்ள இடம் :
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஈரோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
77.85 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1997
-இயற்கை அமைப்பு முறை:
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றி வி. மேட்டுப்பாளையம்,புங்கம்பாடி, செல்லப்பம்பாளையம், கருக்கங்காடுவலசு, தச்சன் கரைவழி, செம்மாண்டாம் பாளையம், மீனாட்சிபுரம், கொங்கு நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன.
-வருகை தரும் பறவையினங்கள்:
பெலிகான்,கொசு உல்லான், கூழைகெடா,ஜெம்புகோரி, பெரிய நீர்காகம், பாம்பு தாரா, சாம்பல் நாரை, வண்ணான் நாரை,சிறிய நீர்காகம், வெண்மார்பு மீன்கொத்தி பறவை உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கிறது..
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களாகும்.
8. வேடந்தாங்கல் -காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் 1998
-அமைந்துள்ள இடம் :
இச்சரணாலயம் சென்னையிலிருந்து 82 கி.மீ தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
30 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1998
-இயற்கை அமைப்பு முறை:
மரங்களால் பாதி மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. இவற்றில் கூடுகள் கட்டி வாழும் பறவைகளைக் காணும் போது ரம்மியமாக காட்சியளிக்கிறது.
-வருகை தரும் பறவையினங்கள்:
இங்கு நீர்காகங்கள், பலவித கொக்குகள், கூழைக்கடா, நீர்க்கோழிகள், நாரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களாகும்.
9. மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்) 1998
-அமைந்துள்ள இடம் :
இச்சரணாலயம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள மேல் மற்றும் கீழ் செல்வனூர் ஆகிய கிராமங்களில் பரவி அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
593.08 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1998
-இயற்கை அமைப்பு முறை:
கருவேல மரங்கள் இங்கு வரும் புலம்பெயரும் பறவைகள் கூடுகள் கட்ட நல்ல வாய்பினைத் தருகின்றன.
-வருகை தரும் பறவையினங்கள்:
இங்கு கூழைக்கடா, கொக்குகள், நத்தை குத்தி நாரைகள், வெள்ளை அரிவாள் மூக்கன்கள், கரண்டி வாயன்கள் ஆகியவை காணப்படுகின்றன.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களாகும்.
10. உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)1998
-அமைந்துள்ள இடம் :
இச்சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூரிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 68 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
45 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1998
-இயற்கை அமைப்பு முறை:
மேட்டூர் அணையின் நீரே இச்சரணாலயத்திற்கு ஆதாரமாகும்.
-வருகை தரும் பறவையினங்கள்:
இங்கு சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் , நத்தை குத்தி நாரை, அரிவாள் மூக்கன், இராக் கொக்கு ஆகியவை வருகை தருகின்றன.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களாகும்.
11. வடுவூர் (தஞ்சாவூர் மாவட்டம்)1999
-அமைந்துள்ள இடம் :
இச்சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 75 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
128.10 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
1999
-இயற்கை அமைப்பு முறை:
மேட்டூர் அணையின் நீரே இச்சரணாலயத்திற்கு ஆதாரமாகும்.
-வருகை தரும் பறவையினங்கள்:
வெள்ளை அரிவாள் மூக்கன்,ஊசிவால் வாத்து, கூழைக்கடா, நீர்க்காகங்கள், நாரை, கிளுவைகள் போன்றவை வருகை தருகின்றன.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களாகும்.
12. கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)2000
-அமைந்துள்ள இடம் :
இச்சரணாலயம் அரியலூர் மாவட்டத்தில் அரியலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்விடம் திருச்சியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
454 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
2000
-இயற்கை அமைப்பு முறை:
இங்கு 800-2000 மி.மீ வரை மழைபொழிவும், 14 டிகிரி முதல் 33 டிகிரி வரை வெப்பநிலையும் நிலவுகிறது.
-வருகை தரும் பறவையினங்கள்:
பட்டைத்தலை வாத்து, பூனைப்பருந்து, செங்கால் நாரை, விரால் அடிப்பான், பொரி வல்லூறு, ஆளிப்பருந்து,கூழைக்கடா, சேற்றுப்பருந்து போன்ற பறவையினங்களைக் காணலாம்.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களாகும்.
13. தீர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் (இராமநாதபுரம் மாவட்டம்)2010
-அமைந்துள்ள இடம் :
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் செல்லும் சாலையில் உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே பறவைகள் வரத்தொடங்கின.
-மொத்த பரப்பளவு:
30 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
2010
-இயற்கை அமைப்பு முறை:
சரணாலய பகுதிகள் மற்றும் நீர்வரத்து பகுதிகள் தூர்வார பட்டு நீர்நிலைகள் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
-வருகை தரும் பறவையினங்கள்:
இந்தாண்டு மஞ்சள் மூக்கு நாரை,கூழைக்கடா, கரண்டி வாயன், அரிவாள் மூக்கன், செங்கால் நாரை உள்ளிட்ட முப்பது வகையான பறவைகள் வந்துள்ளன.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களாகும்.
14. சக்கரக்கோட்டை தொட்டி பறவைகள் சரணாலயம் (இராமநாதபுரம் மாவட்டம்)2012
-அமைந்துள்ள இடம் :
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலய பகுதியில் மரங்கள் நிறைந்து காடுபோல் காட்சியளிக்கிறது.
-மொத்த பரப்பளவு:
230 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
2012
-இயற்கை அமைப்பு முறை:
பரந்து விரிந்து கிடக்கும் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம் விவசாயத்திற்கு தண்ணீர் சேமிக்க பயன்படும் பாசனத்தொட்டியாகும்.
-வருகை தரும் பறவையினங்கள்:
பெரிய கர்மோரண்ட்,காமன் டீல், ஊதா ஹெரான், காமன் ரெட்ஷாங்க், சீப்பு வாத்து.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களாகும்.
15. ஒசுடு ஏரி பறவைகள்( சரணாலயம்விழுப்புரம் மாவட்டம்)2015
-அமைந்துள்ள இடம் :
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், ஊசுடு ஏரியில், திண்டிவனம் வனச்சரகத்திற்குட்பட்ட கழுவெளி மற்றும் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
390 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
2015
-இயற்கை அமைப்பு முறை:
புதுச்சேரி நகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.தமிழ்நாடு - புதுச்சேரி எல்லைப்பகுதியில் 800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் 390 ஹெக்டேர் புதுச்சேரி பகுதியிலும், மீதமுள்ள பகுதி தமிழ்நாட்டிலும் உள்ளது.
-வருகை தரும் பறவையினங்கள்:
பிளம்மிங்கோ, வர்ணநாரை , கூழைக்கடா ஆகியவை அடங்கும்.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களாகும்.
16. கழுவேலி ஈரமண் நிலம் (விழுப்புரம் மாவட்டம்)2021
-அமைந்துள்ள இடம் :
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கழுவேலி ஈரநிலம், கடற்கரை சதுப்பு நில ஏரியாகும்.
-மொத்த பரப்பளவு:
5151.60 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
2021
-இயற்கை அமைப்பு முறை:
வங்காள விரிகுடாவின் அருகில், புதுச்சேரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், ஆரோவில்லில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
-வருகை தரும் பறவையினங்கள்:
கூளைக்கடா,அரிவாள் மூக்கன், கரண்டி மூக்கன், பூ நாரை, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, பாம்பு தாரை.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களாகும்.
17. நஞ்சராயன் ஏரி(திருப்பூர் மாவட்டம்)2022
-அமைந்துள்ள இடம் :
நஞ்சராயன் ஏரி பகுதியைச் சேர்ந்த ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு தாலுகா
-மொத்த பரப்பளவு:
125.86 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
2022
-இயற்கை அமைப்பு முறை:
சதுப்பு நிலம் திருப்பூர் நகரத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் திருப்பூர் ஊத்துக்குளி பிரதான சாலையில் வடக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது.
-வருகை தரும் பறவையினங்கள்:
இந்திய கார்மோரண்ட், ஃபிளாப்ஷெல் ஆமைகளுக்கு புகழ்பெற்றது.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களாகும்.
18. தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் (ஈரோடு மாவட்டம்)2023
-அமைந்துள்ள இடம் :
அந்தியூர் வனப்பகுதியையொட்டியுள்ள கோபிசெட்டி பாளையம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளை இணைத்தும் சரணாலயம் அமைந்துள்ளது.
-மொத்த பரப்பளவு:
80.567 ஹெக்டேர்
-அங்கீகாரம் பெற்ற ஆண்டு:
2023
-இயற்கை அமைப்பு முறை:
சென்னம்பட்டி வனச்சரக பகுதிகள் முழுமையாகவும், ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர், பர்கூர், அந்தியூர் வனப்பகுதியையொட்டியுள்ள கோபிசெட்டி பாளையம் வட்டத்துக்குட்பட்ட இடங்களும் அடங்கும்.
-வருகை தரும் பறவையினங்கள்:
சரணாலயத்தில் பல வகையான பாலூட்டிகள், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் உள்ளன.
அதோடு இல்லாமல் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், மற்றும் மான்கள் உள்ளிட்டவை அதிகம் வசிக்கிறது.
-சுற்றுலா பயணிகள் காண தகுந்த காலம்:
நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களாகும்.