தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயங்கள்

தமிழக பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்: தமிழ்நாட்டில் இதுவரை அங்கீகாரம் பெற்ற 18 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. நீர்நிலைகளில் வாழும் பறவைகளைப் பாதுகாக்கவும், பறவைகள் அதிகம் வந்து தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து அவற்றைப் பாதுகாத்தும் வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட காலங்களில் இப்பகுதிகளுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து இங்கு தங்கி செல்கின்றன. இவைகள் மீண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் முடிவில் தங்கள் இருப்பிடத்திற்க்கு திரும்புகின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் பறவைகள் சரணாலயங்கள் , அவற்றின் இருப்பிடம், பரப்பளவு, அமைப்பு பற்றி விரிவாக இங்கு பார்ப்போம். தமிழக அரசு இதுவரை அறிவித்துள்ள பறவைகள் சரணாலயங்கள்: மொத்தம் 18. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள் வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்) 1977 பழவேற்காடு ஏரி (திருவள்ளூர் மாவட்டம்)1980 கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)1989 கஞ்சிரங்குளம் (இராமநாதபுரம் மாவட்டம்)1989 சித்திரங்குட...